madurai jyothisri durga sucide neet : மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த 19 வயது மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் மொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், இறப்பதற்கு முன்பு மாணவி பேசிய உருக்கமான ஆடியோவும் வெளியாகியுள்ளது.
Advertisment
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார்.கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி ஜோதி துர்கா இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நாளை தேர்வு நடைபெற உள்ளதால், இன்று அதிகாலை 1 மணி வரை தேர்வுக்கு படித்துள்ளர். அந்த நேரத்தில் தேர்வில் தோற்று பெற்றோருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விடுவோமோ என்ற அச்சத்தில் உருக்கக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இந்நிலையில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர், தற்கொலை முடிவை தானாகவே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் குறை கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
“ஒருவேளை நீட் தேர்வில் தோல்வி அடைந்து தனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் இந்த முடிவை எடுத்ததற்காக தனது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த ஆடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன், அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil