/tamil-ie/media/media_files/uploads/2018/04/madurai-kallazhagar.jpg)
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா உலகளவில் பிரசித்திப் பெற்றது. அதன்படி இந்தாண்டின் திருவிழா, கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் துவங்கினர். கடந்த 17-ம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.
நேற்று தேரோட்டமும், தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. வாக்குப்பதிவு பாதிக்கும் என எதிர்பார்த்த நிலையில், சென்னையை விட 3 சதவீத வாக்குகளை அதிகமாக பதிவு செய்திருக்கிறது மதுரை.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர். இதனை சுமார் 10 லட்சம் பக்தர்கள் கண்டு களித்தனர். இதனால் மதுரை விழாக்காலம் பூண்டது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.