மதுரை மாவட்டம் மேலூர் அருகே கள்ளழகர் திருக்கோவில் அமைந்துள்ளது திருக்கோவிலின் மலை மேல் அறுபடை வீடுகளில் பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோவிலும்அதனை அடுத்து நுபுரக் கங்கையோடு ராக்காயி அம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினசரி பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரங்களிலும் திருக்கோவில் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளில் பழமுதிர்சோலைக்கும் நூபுர கங்கைக்கும் சென்று நீராடி சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மலைப்பாதையில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மலைக்குச் செல்ல தடை விதிப்பதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வழக்கம்போல பழமுதிர்ச்சோலையில் முருகன் கோவிலிலும் நூபுர கங்கை அமைந்திருக்கும் ராக்கா சன்னதியிலும் அபிஷேக ஆராதனை பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பக்தர்கள் நடைபயணமாக சென்று தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“