மதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் குமார் ஜானகிராமன் தனது துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய பல்கலைகழகங்களில் ஒன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைகழகத்தில் துணை வேந்தராக இருந்த கிருஷ்ணன் என்பரின் பதவிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைகழகத்திற்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் இருந்த குமார் ஜானகிராமன் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2022-ம் ஆண்டு இவர் துணை வேந்தராக பொறுப்பேற்ற நிலையில், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, பல்கலைகழக அலுவலர்களுக்கு நிர்ணையிக்கப்பட்ட சம்பளத்தை மறுநிர்ணையம் செய்தது சிக்கலை ஏற்படுத்தியது. இதனிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குமார் ஜானகிராமனுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நிதி பற்றாக்குறை, தனது உடல்நலை ஆகியவற்றை காரணம் காட்டி குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 11 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, குமார் ஜானகி ராமன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூற ஆளுனரிடம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இது குறித்து ஆளுனரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“