/indian-express-tamil/media/media_files/2025/04/29/l8XZ5FtyKTjsVguKBaX7.jpeg)
Madurai
மதுரை கே.கே. நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் ஸ்ரீ மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சிவ ஆனந்தி மற்றும் அமுதன் தம்பதியினரின் மகள் ஆருத்ரா (வயது 4). இன்று காலை கே. கே. நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கின்டர் கார்டன் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அண்ணா நகர் போலீசார் பள்ளி தாளாளர் திவ்யாராஜேஸ் மற்றும் பள்ளி பணியாளர்கள் மேனகா, ஐஸ்வர்யா, ஜெயபிரியா, சத்யபவானி, சித்ரா, சரிதா ஆகிய 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.