Lok Sabha Election Madurai: 2024 மக்களவை தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. நிறைவுகட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இந்த 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.
Advertisment
முதல்கட்ட நிலவரப்படி சிட்டிங் எம்.பி. சு. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அடுத்த இடத்தில் அதிமுக சரவணனும், 3ம் இடத்தில் பா.ஜ.க. பேராசிரியர் ராம சீனிவாசனும் காணப்பட்டனர். இந்நிலையில், சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
மதுரை மக்களவை தொகுதி
தமிழ்நாட்டின் பழம்பெரும் சிறப்புமிக்க மக்களவை தொகுதிகளில் மதுரையும் ஒன்று. சிறப்புமிக்க வைகை நதி இங்கு பாய்கிறது. பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த இடமாக இது அறியப்படுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர், அழகர் திருக்கோவில் என பல கோவில்கள் இங்கு உண்டு. இங்கு விவசாயம், நெசவு பிரதான தொழிலாக உள்ளது. சில்வர் பட்டறை, ஜெய்ஹிந்த்புரம், பெத்தானியபுரத்தில் சிறு தொழில்கள் அதிகம் காணப்படுகின்றன.
சட்டமன்ற தொகுதிகள்
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மேற்கு
மதுரை கிழக்கு
மதுரை மத்தி
மேலூர்
2019ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 7,74,381 ஆண்களும், 8,02,176 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 188 ஆகும்.
முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு
வெற்றி பெற்றவர்கள்
கட்சி
1980
சுப்புராமன்
காங்கிரஸ்
1984
சுப்புராமன்
காங்கிரஸ்
1989
ராம்பாபு
காங்கிரஸ்
1991
ராம்பாபு
காங்கிரஸ்
1996
ராம்பாபு
தமிழ் மாநில காங்கிரஸ்
1998
சுப்பிரமணியன் சுவாமி
ஜனதா
1999
மோகன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
2004
மோகன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
2014
கோபாலகிருஷ்ணன்
அதிமுக
2019
சு. வெங்கடேசன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மதுரை தொகுதியில் மூத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
2024 மக்களவை தேர்தல்- சு. வெங்கடேசன் வெற்றி
2024 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி. சு. வெங்கடேசன், அ.தி.மு.க. தரப்பில் பி. சரவணன், பா.ஜ.க. தரப்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் மோ. சத்யா தேவி உள்ளிட்ட பலர் களத்தில் இருந்தனர்.
வேட்பாளர் பெற்ற வாக்குகள் விவரம்
சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்)
4,30,333
ராமசீனிவாசன் (பா.ஜ.க)
2,20,914
சரவணன் (அ.தி.மு.க)
2,04,804
சத்தியா தேவி (நாம் தமிழர்)
92,879
பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“