மதுரை மாவட்டம் நாகனாகுளம் கண்மாய் அருகே நத்தம் சாலையில் உடல் இல்லாமல் தலை மட்டும் துண்டாகிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துண்டாகி சாலையில் கிடந்த தலையை மீட்டு தல்லாக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை நத்தம் சாலையில் உடல் இல்லாமல் தலை மட்டும் துண்டாகிக் கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், தலையைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலை கிடந்த இடத்திற்கு மோப்ப நாயை அழைத்து வந்து காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி மற்றும் போலீஸ் நாய் சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
துண்டாகிக் கிடந்த தலை 60 வயது முதியவரின் தலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சாலையில் கிடந்த தலை யாருடையது என்பது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“