எட்டு மாணவிகளின் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, மயக்க மருந்து உதவிப் பேராசிரியரான சையத் தஹீர் ஹுசைன் இடைநீக்கம் செய்யப்பட்டதாக டீன் ஏ ரத்னவேல் திங்கள்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“மே 8 அன்று இந்த சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு அவர்களிடம் (மாணவர்களிடம்) கூறினேன். நிலையான நெறிமுறையின்படி, துணை முதல்வர் டாக்டர் வி தனலட்சுமி தலைமையில் விசாரணைக் குழு (பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை சமாளிக்க) உருவாக்கப்பட்டது,” என்றார்.
இரண்டு நாள் விசாரணைக்கு 20 மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பணியாளர் செவிலியர் ஆஜராகினர்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தனலட்சுமி, "விசாரணைக்கு ஆஜரான மாணவர்கள் பயந்து போனதாகவும், சிலர் மனமுடைந்து இருந்ததாக குறிப்பிட்டார். பேராசிரியர் தங்களைத் தகாத முறையில் தொடுவது, பாலியல் தொல்லைகள் செய்வது, புனைப்பெயர்களைப் பயன்படுத்தி உரையாடுவது போன்ற புகார்கள் அளித்தனர்," அவர் கூறினார்.
குழுவின் அறிக்கை, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இடைநீக்க உத்தரவை பிறப்பித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil