மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்காக, விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணிகளை, மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு ஆலோசகர்களை தேர்ந்தேடுப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை 120 நாட்களுக்குள் தயார் செய்ய வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் சேவை, எட்டாயிரம் கோடி ரூபாய் செலவில், மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 31 கிலோமீட்டர் தூரத்திற்கு, மெட்ரோ ரயில்சேவை அமைப்பதற்கு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.