மதுரையில் கடந்த 3 நாட்களில் 40 பேர் காய்ச்சல் காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களில் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.மதுரையில் 3 நாட்களில் 15 சிறார்கள் உட்பட 40 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.