Advertisment

எம்.பி.,க்கள் பேச்சு ஹிந்தியில் மொழி மாற்றி ஒளிப்பரப்பு; மக்களவை செயலகம் மன்னிப்பு கேட்க சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் அல்லது தாய்மொழியில் பேசிய எம்.பி.,க்கள் உரை ஹிந்தியில் மொழிமாற்றி ஒளிப்பரப்பிய சான்சட் டிவி; மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு

author-image
WebDesk
New Update
ansad tv and su venkatesan

இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும் என மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது. 

இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Hindi Impositon Su. Venkatesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment