su-venkatesan | jallikattu | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்திருந்த எம்.பி. சு வெங்கடேசன் கூறுகையில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் புராணமும் இதிகாசமும் ஜல்லிக்கட்டுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
இது கண்டனத்துக்குரியது. ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலாச்சாரம். இதை அவர் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்” என்றார்.
தொடர்ந்து, ஏற்கெனவே அவர் தமிழக கோவில் சொத்துக்கள் கொள்ளைப் போவதாக தவறான தகவல்களை தெரிவித்தார். கீழடி அகழாய்வில் தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேர் கீழடி. தமிழும் திமிலும் தமிழர்களின் அடையாளம்" என்றார்.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் ஜல்லிக்கட்டு சனாதன திருவிழா என்ற ட்விட்டரை பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையானது.
நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்த பதிவில், ‘சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் விழாவைப் பற்றி கலித்தொகை விரிவான குறிப்புகளைத் தருகிறது. முதலில் தெய்வ வழிபாடு செய்த பிறகே விழா தொடங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“