ராஜராஜன் கட்டிய செம்பரம்பாக்கம்; விமானத்தில் ஒலித்த குரல்: பாராட்டிய சு. வெங்கடேசன்!

'இடது பக்கம் இருக்கும் பயணிகளின் பார்வைக்கு தெரிவது முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி' என்ற குரல் விமானத்தில் இருந்த பயணிகள் ரசிக்கும்படி அமைந்தது.

author-image
WebDesk
New Update
Madurai MP Su Venkatesan changed his profile picture

விமானியுடன் செல்பி எடுத்துக் கொண்ட மதுரை எம்பி சு வெங்கடேசன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “உள்நாட்டு விமானத்தில் அவ்வப்பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதைக் கேட்க முடியும். நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்  (6F7258) விமானியின் அறிவிப்பு வியப்பை உருவாக்கியது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து, ““இடது பக்கம் இருக்கும் பயணிகளின் பார்வைக்கு தெரிவது முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி” என்று ஒலித்தது அந்தக்குரல். 
காற்றின் வேகத்தை, வெயிலின் அளவைத்தான் விமானிகள் சொல்வார்கள் ஆனால் ஏரியின் வரலாற்றை வானிலே ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். 

Advertisment
Advertisements

அந்த குரலுக்கு சொந்தக்காரரான விமானி ப்ரியவிக்னேஷை  @G_Priyavignesh அழைத்து வாழ்த்துச்சொன்னேன்.  வேள்பாரி வாசகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

நந்தி படத்துடன் முகப்பு படம் மாற்றம்

இதற்கிடையில் சு. வெங்கடேசன் எம்.பி. ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்தை மாற்றியுள்ளார். புதிய புகைப்படத்தில் நந்தியின் முன்னால் உள்ளார்.
மக்களவை தேர்தலை தொடர்ந்து அவர் முகப்பு பிக்சரை மாற்றியிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Su. Venkatesan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: