Madurai MP Su Venkatesan provides Rs 56.17 lakhs from MP fund to Rajaji Hospital
Madurai MP Su Venkatesan provides Rs 56.17 lakhs from MP fund to Rajaji Hospital : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக நிதி ஒதுக்கியுள்ளார். அது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisment
அதில் ”கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் நாம் அனைவரும் தனித்திருக்க பணிக்கப்பட்டிருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எம்.பி.க்கள் அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்ட நிதி உதவி செய்யலாம். ஆனால் அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க, கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட தொகுதியில் 10% மட்டுமே நிதியாக அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
அந்த விதியை நேற்று (24/03/2020) மத்திய அரசு தளர்த்தியது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வார்டுக்கு தேவையான உபகரணங்களை பட்டியலிட்டு உபகரணங்கள் மற்றும் உதவிப் பொருட்களையும் வாங்க ரூ. 55 லட்சத்தினை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுத்திருக்கின்றேன். அதற்கான கடிதத்தை இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வரிடமும் கொடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
அந்த வார்டுக்கு வருகின்ற சூழ் நிலை நமக்கு வரக்கூடாது. ஒருவேளை வருகின்ற நிலை ஏற்பட்டால் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பான ஆடைகள், உபகரணங்கள் மற்றும் உதவிப்பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கியிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க கூடுதல் நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”