இதனை கைவிடுங்கள்… மரியமும், மாரியம்மாக்களும் பாவம்… பிரதமருக்கு மதுரை எம்.பி. “ஓப்பன் லெட்டர்”

உங்களின் நலனுக்காகவும், வளத்துக்காகவும் இறைவனை தொழ எண்ணிலடங்காத எளிய மக்கள் காத்திருக்கிறார்கள் - சு. வெங்கடேசன்

By: Published: March 17, 2020, 4:04:59 PM

Madurai MP Su Venkatesan writes open letter to prime minister Narendra Modi  : மதுரை எம்.பி. சு. வெங்கடேசனுக்கு மார்ச் மாதம் 16ம் தேதி பிறந்தநாள். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் தங்களின் கடிதங்களை அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் திருச்சியை சேர்ந்த ஏ. மரியம் பீவி என்பவரும் வெங்கடேசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இரண்டையும் ஒரே நேரத்தில் படித்த அவர் அக்கடிதம் குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் இந்தின் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

திருச்சியில் இருந்து மதுரைக்கு 150 கி.மீ பயணம் செய்து சில முறை தன்னுடைய பிறப்பு சான்றிதழை வாங்க அலைந்திருக்கிறார். சி.ஏ.ஏவுக்கு எதிராக திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் சு.வெ பங்கேற்பார் என்று மரியம் அவரை சந்திக்க முயன்றாதும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் “மாநகராட்சி அலுவலர்” ஏதேதோ காரணங்களைக் கூறி மரியமுக்கு பிறப்புச் சான்றிதழை வழங்க மறுக்கிறார் என்பதை குறிப்பிட்டு மனு ஒன்றை தபால் மூலம் சு.வெக்கு அனுப்பியுள்ளார். தனக்கு வந்த தபாலின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் சு.வெ.. அதன் பின்னர் மாநகராட்சி அலுவலர்கள் மரியத்திற்கு போனில் அழைப்புவிடுத்து பிறப்புச் சான்றிதழை வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளனர். வீடு திரும்பிய பெண் ”உயிருள்ளவரை உங்களை மறக்கமாட்டேன்” என்று கூறி கடிதம் எழுதியுள்ளார். இந்த சிறுபணிக்கே ஆயுள் உள்ள வரை மறக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள்.

தன்னுடைய பிறப்புச் சான்றிதழைப் பெறவே இவர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக போராடியுள்ளார். இவர்களிடம் தான் நீங்கள் அவர்களின் பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழ்களை கேட்கின்றீர்கள். ” “உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்” என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அந்த வார்த்தையுள் இருக்கும் உண்மையைப் பற்றிகேட்கிறேன். சிஏஏ வை திரும்பப்பெறுங்கள், என்பிஆர், என்ஆர்சி யை கைவிடுங்கள். உங்களின் நலனுக்காகவும், வளத்துக்காகவும் இறைவனை தொழ எண்ணிலடங்காத எளிய மக்கள் காத்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் உயர்வுக்கு அது பேருதவியாக இருக்கும்” என்று என்.ஆர்.சி., என்.பி.ஆர்., மற்றும் சி.ஏ.ஏவை திரும்பிப் பெறுமாறு அவர் பிரதமருக்கு ஓப்பன் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க : ”அச்சமில்லை அச்சமில்லை” பாரதியின் பாடலோடு நடைபெற்ற மயிலாப்பூர் ஷாஹீன் பாக் போராட்டம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madurai mp su venkatesan writes open letter to prime minister to scrap caa nrc npr

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X