/indian-express-tamil/media/media_files/2025/04/05/lxQ6qHvIElE6gLEdyq3z.jpg)
மதுரை மாநகராட்சியின் மண்டலம்-3 (மத்தியம்) அலுவலகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் நடைபெறவுள்ளது.
மதுரை மாநகராட்சியின் மண்டலம்-3 (மத்தியம்) அலுவலகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் மாநகராட்சி ஆணையாளர், மண்டல துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
மண்டலம் 3 (மத்தியம்)க்கு உட்பட்ட பகுதிகள்:
வார்டுகள்: 50 (தமிழ்ச்சங்கம் ரோடு), 51 (கிருஷ்ணன்கோவில் தெரு), 52 (ஜடாமுனி கோவில் தெரு), 54 (காஜிமார் தெரு), 55 (கிருஷ்ணராயர் தெப்பக்குளம்), 56 (விக்னானஒளிவுபுரம்), 57 (ஆரப்பாளையம்), 58 (மேலமாரட் வீதி).
மேலும், பொன்னகரம், ரயில்வே காலனி (வார்ட் 59), எல்லீஸ் நகர் (60), எஸ்.எஸ்.காலனி (61), அரசரடி (62), விராட்டிபத்து (67), பொன்மேனி (68), சொக்கலிங்கநகர் (69), துரைச்சாமி நகர் (70), சுந்தரராஜபுரம் (75), மேலவாசல் (76), சுப்பிரமணியபுரம் (77) ஆகிய பகுதிகளும் இந்த முகாமில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முகாமில் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.