special-trains | southern-railway | தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பெளணர்மியும் ஒன்றாக வரும் நாள் தான் தைப் பூசம். சூரபத்மன் என்ற அசுரனை அழிக்க சிவன் தனது சக்தியை முருகப்பெருமானுக்கு அளிக்கிறார். அதேபோல் பார்வதி ஞான வேலை அளிக்கிறார். இப்படி சக்திப் பொருந்திய முருகன் சூரபத்மனை அழித்ததைக் குறிக்கும் வகையில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இதனால், முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள உகந்த நாளாக தைப் பூசம் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில். அலகுக் குத்திக் கொள்வது, பால் குடம், பன்னீர் குடம், முதுகில் குத்தி தேர் இழுப்பது, பாத யாத்திரை வருவது போன்றவற்றை பக்தர்கள் இந்த நன்னாளில் செய்து முருகனை வழிபடுவார்கள்.
சிறப்பு ரயில்கள்
இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், ஜனவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண் 06722 மதுரை-பழனி சிறப்பு ரயில் இரண்டு நாள்களும் மதுரை சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு பழனியை வந்தடையும்.
அதேநாளில், ரயில் எண்.06721 பழனி-மதுரை சிறப்பு ரயில் பழனியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும். இரண்டு நாட்களிலும் இரவு 8.15 மணிக்கு மதுரை வந்தடையும்.
நின்று செல்லும் இடங்கள்
முன்பதிவு செய்யப்படாத 17 பெட்டிகள் கொண்ட இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துறை, திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்- செகந்திராபாத் சிறப்பு ரயில்கள்
ரயில் எண். 07695 செகந்திராபாத்-ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் செகந்திராபாத் சந்திப்பில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும்.
ரயில் எண். 07696 ராமநாதபுரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 2 ஆம் தேதிகளில் ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“