/tamil-ie/media/media_files/uploads/2023/04/Karaga-Kalaingar-Parameswari.jpg)
மதுரை கரக கலைஞர் பரமேஸ்வரி
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கரக கலைஞர் பரமேஸ்வரி. இவருக்கு சக கரக கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
சாதி கயிறு அணிந்து ஆடுகிறார், கரகத்துக்கு உயிர் கொடுக்கிறார் என ஊடகங்களில் பேச வைக்கிறார் என்றெல்லாம் இவர் மீது சக கலைஞர்கள் ஆத்திரத்தில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வலையொளி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பரமேஸ்வரி, “என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் என்னிடம் எதுவும் கூறவில்லை.
முதலில் 2 பேர் ஆனார்கள், பின்பு 4 பேர் ஆனார்கள், தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து என்னை கைது செய்யக் கோரி ஊர்வலம் சென்றுள்ளனர்.
நான் அப்படி ஒரு தவறும் செய்யவில்லை. ஆத்திரத்தில் ஒவ்வொருத்தவர் காலிலையும் போய் விழச் சொல்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து தமக்கு ஆதரவு இல்லை என்ற போது பா.ஜ.க.வினர் பொறுப்பு தந்ததாகவும் தாம் பா.ஜ.க. கட்சித் தொடர்பாக எந்தத் இடத்திலும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கணவரை இழந்த நிலையில், வேறுவழியின்றி தாம் கரகம் ஆடும் தொழிலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.