மதுரையில் என்கவுண்டர்: சுட்டுத் தள்ளப்பட்ட கொலைக் குற்றவாளி

கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மதுரையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மதுரையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai Encounter Rowdy Subhash Chandra Bose shot dead Tamil News

கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மதுரையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ரவுடி  சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய அவர் மீது போலீசார் நடத்திய, துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
மதுரை கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுபாஷ் சந்திர போஸ், போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். வெள்ளை காளியின் கூட்டணியில் செயல்பட்ட சுபாஷ் சந்திர போஸ், மதுரை காவல் துறையின் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய முயன்ற போது, எதிர்த்து தாக்குதல் நடத்தியதால், போலீசார் தற்காப்புக்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Advertisment

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறையில் உள்ள வெள்ளை காளியின் தாய் உள்ளிட்ட ஏழு பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரவுடி சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  தூங்க நகரத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: