மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரில் 2,500 போலீசார் மற்றும் புறநகர் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு கட்டுப்பாட்டைப் பலப்படுத்தியுள்ளனர். மூலக்கரை முதல் திருப்பரங்குன்றம் மலை வரை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/67f911d9-dcf.jpg)
திருப்பரங்குன்றம் பகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/5a62c3ec-feb.jpg)
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், மோதல் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.