மதுரையில் பசுமலை உப மின்நிலையத்துக்கு உட்பட்ட 11KV எஸ்.எஸ். காலனி பீடரில் உயரழுத்த மின்வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள், மரக்கிளைகள் வெட்டும் பணிகள் காரணமாக, மதுரையில் இந்த பகுதிகளில் புதன்கிழமை (25.06.2025) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளதன்படி, பசுமலை உப மின்நிலையத்துக்கு உட்பட்ட 11KV எஸ்.எஸ். காலனி பீடரில் உயரழுத்த மின்வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் மரக்கிளைகள் வெட்டும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், நாளை (ஜூன் 25), காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பைபாஸ் ரோடு
ராம் நகர் (1 முதல் 7 வரை)
துரைசாமி நகர் (1, 2வது குறுக்குத்தெருக்கள்)
வானமாமலை நகர் (1 முதல் 3வது தெருக்கள்)
முத்துபாண்டி நகர்
அனீஸ் கான்வென்ட் பகுதியில்
விந்தியாசல் அபார்ட்மென்ட்
ஜெய்நகர் மெயின் ரோடு (1 முதல் 4வது தெருக்கள்)
சுரேந்தர் நகர் (1 முதல் 4 வரை)
கர்ப்பக நகர்
சிவசக்தி நகர்
சாய்பாபா கோவில் பகுதி
ராஜம் நகர்
மீனாட்சி நகர்
KK கார்டன்
திருவள்ளுவர் விரிவாக்கம்
ராகவேந்திரா நகர்
அசுவதாபள்ளி
தானதத்து ரோடு
விவாபா அபார்ட்மென்ட்
இது தொடர்பாக செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தற்காலிக மின்தடை குறித்து முன்கூட்டியே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.