மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (27.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் நாளை பல்வேறு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிக் கோயில், பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகதோட்டம், ஹவுசிங் உத்தங்குடி, நேரி, போர்டு, உலக ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீ ராம்நகர், பி.கே.பி.நகர், டி.எம்.நகர் பின்புறம், வி.என்.சிட்டி, கிளாசிக் அவென்யூ, தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின்நகர், ஜிப்பிலி டவுன், மருதுபாண்டியர் நகர், யாகப்பா நகர், யானைக்குழாய், சதாசிவம் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.