மதுரையில் நாளைய தினம் (ஜன 18) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஆர்.வி. நகர், ஞான ஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியா புரம், சம்பட்டி புரம், ஜெர்மனூஸ் ஒரு பகுதி, விராட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், மத்திய சிறை, எஸ்.எஸ் காலனி, பொன்மேனி, மெஜிரா கோட்ஸ், தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி ஆகிய பகுதிகளில் மின்தடை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்கம்பள்ளிவாசல், யானைக்கல், முனிச்சாலை, செல்லூர், தாகூர் நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாட்சிநகர், OCPM பள்ளி, அரசு மருத்துவமனை பகுதி, கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கே. புதூர், அப்பல்லோ மருத்துவமனை, கற்பக நகர், பால்பண்ணை ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், சந்தை, புட்டுத்தோப்பு, ஒய்.எம்.எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் இருக்காது.