மதுரை - ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பொங்கல் போனஸ் தராததால் போராட்டத்தில் குதித்தனர். இதனால், வாகனங்கள் இலவசமாக சென்றன.
/indian-express-tamil/media/post_attachments/a0d8d91d-f31.jpg)
மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பசேத்தியில் அருகே அமைந்துள்ளது திருப்பாசேத்தி சுங்கச்சாவடி. இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பாண்டிகையின் போது போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது பாதி போனஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதியை பொங்கல் பண்டிகையின் போது பெற்றுக் கொள்ளும் படி கூறியுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/00cf3481-8b0.jpg)
இதையடுத்து, ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி அந்த மீதி போனஸ் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். தற்போது பொங்கல் பண்டிகைக்கு அந்த மீது போனஸ் வழங்காததால் ஊழியர்கள் சுங்கச்சாவடியில் பணிபுரிவதை நிறுத்திக் கொண்டனர். மாலை நான்கு மணி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் சுங்க வரி செலுத்தாமல் இலவசமாக சென்று கொண்டிருக்கிறது.