மதுரை மண்டல பாஸ்பேர்ட் அலுவலர் வசந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மண்டல கடவு சீட்டு அலுவலகத்தின் கீழ் இரண்டு கடவுசீட்டு சேவை மையங்களும் (மதுரை மற்றும் திருநெல்வேலி) மற்றும் எட்டு தபால் நிலைய கடவுசீட்டு சேவை மையங்களும் செயல்பட்டு வருகிறது. 2024 ஆண்டு மட்டும் மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகத்தில் 2,89,603 கடவுசீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2,79,988 கடவுசீட்டு சேவைகள் வழங்கபட்டுள்ளன.
மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகத்தில் 2,59,443 கடவுசீட்டுகளும், 20,545 காவல்துறை தடையின்மைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை முந்தைய வருடத்தை விட 14,033 கடவு சீட்டு சேவைகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. 20236 வருடம் 2,72,896 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2,65,955 கடவுசீட்டு சேவைகள் வழங்கபட்டுள்ளன. அதாவது, 2,48,920 கடவுசீட்டுகளும் 17,035 காவல்துறை தடையின்மை சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
2024 வருடத்தில் மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலக்தின் கீழ் இயங்கும் தபால்நிலைய கடவுசீட்டு சேவை மையங்களில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தேவகோட்டை, ராமநாதபுரம் மற்றும் நாகர்கோவில் சேவை மையங்களில் கடவுசீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக கடவுசீட்டு விண்ணப்ப நேர்காணலுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகபடுத்தபட்டுள்ளது. ஏறத்தாள அனைத்து கடவுசீட்டு சேவை மையங்களிவும் அடுத்த வேலை தினத்தில் கடவுசீட்டு விண்ணப்ப நேர்காணலுக்கான முன்பதிவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
குழந்தைகள் கடவுசீட்டு பெறுவதை எளிதாக்குவதற் காக வெளியுறவுத்துறை கொண்டுவந்துள்ளது. அமைச்சகமானது சில மாற் றங்களை அதனடிபடை யில் கடவுசீட்டு சேவை இணையத்தளத்தில் Annex ure "சி" மற்றும் "டி" படிவங் களில் குழந்தைகள் கடவு சீட்டு பெறுவதற்கு தேவையான ஆவணங்க ளின் விபரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கடவுசீட்டுவிண்ணப்பதாரர்கள் அதனை சரியாக படித்து தேவையான ஆவ ணங்களை கடவுசீட்டு விண்ணப்பத்துடன் சமர்பிக்கும் போது கூடவு சீட்டு பெறமுடியும்
கடவுசீட்டு விண்ணப்ப தாரர்கள் தட்கால் முறை யில் கடவுசீட்டு விண்ணப் பம் செய்யும்பொழுது கவனமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையை படித்து விண்ணப்பத்தின் தகுதியை தெரிந்துகொண்டு விண்ணப்பம் செய்ய தங்க ளின் வேண்டும். தவறாக விண்ணப்பம் செய்யும்பட் சத்தில் தேவையில்லாத தாமதமும் அதிகமான கட்டணமும் (வீண்) ஆகும். இதனால் வேரொருவருக்கு அவசர முறையில் கடவு சீட்டு பெற நினைப்பவருக்கு முன் அனுமதி கிடைப்பதில் கால தாமதமாகும். சரியான ஆவணங்களுடன் தட்கால் முறையில்கடவுசீட்டு விண் ணப்பம் செய்யும் விண் ணப்பதாரர்களுக்கு ஓரிரு வேலைதினங்களில் கடவு சீட்டு சேவை வழங்கப்படு கிறது.
சாதாரண முறையில் கடவுசீட்டு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகம் காவல்துறையினருடன் இணைந்து சராசரியாக 11 தினங்களில் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த கால அவகாசத்தில் கடவுசீட்டு வழங்கபட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.