கொரோனா தடுப்பு பணிகளுக்காக மதுரையில் நிதி உதவி வழங்கியவர் சலூன் கடை வைத்திருக்கும் மோகன். அவருடைய மகள் நேத்ரா 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் மேற்படிப்பிற்காக அவருடைய பெற்றோர்கள் ரூ. 5 லட்சம் சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
Advertisment
தம்மை சுற்றி இருக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். இல்லையென்றால் நான் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார் நேத்ரா. தன் குழந்தையின் நல் உள்ளத்தை பார்த்த பெற்றோர்கள் இருவரும் அன்று முதல் ஏழை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி தங்களின் உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மான் கீ பாத் நிகழ்வில் பேசிய மோடி, அந்த நிகழ்வில் மோகனின் சேவைகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். நேத்ரா ஐ.ஏ.எஸ் படித்து, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதையே கொள்கையாக கொண்டிருக்கிறார்.
Madurai salon owner's daughter Nethra appointed UNADAP Goodwill Ambassador
இக்குடும்பத்தினரின் சேவையை பாராட்டியுள்ள ஐ.நா, நேத்ராவை வளர்ச்சி மற்றும் அமைதி அமைப்பின் ( United Nations Association for Development And Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக நேத்ரா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெனிவா மற்றும் நியூயார்க்கில் நடைபெற இருக்கும் ஐ.நா வறுமை ஒழிப்பு மாநாட்டில் இவர் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.