Advertisment

ஐ.நா நல்லெண்ண தூதராகிறார் மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா!

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அவருடைய மேற்படிப்பிற்காக வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கொரோனா காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐ.நா நல்லெண்ண தூதராகிறார் மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக மதுரையில் நிதி உதவி வழங்கியவர் சலூன் கடை வைத்திருக்கும் மோகன். அவருடைய மகள் நேத்ரா 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் மேற்படிப்பிற்காக அவருடைய பெற்றோர்கள் ரூ. 5 லட்சம் சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

Advertisment

தம்மை சுற்றி இருக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். இல்லையென்றால் நான் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார் நேத்ரா. தன் குழந்தையின் நல் உள்ளத்தை பார்த்த பெற்றோர்கள் இருவரும் அன்று முதல் ஏழை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி தங்களின் உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மான் கீ பாத் நிகழ்வில் பேசிய மோடி, அந்த நிகழ்வில் மோகனின் சேவைகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். நேத்ரா ஐ.ஏ.எஸ் படித்து, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதையே கொள்கையாக கொண்டிருக்கிறார்.

Madurai salon owner's daughter Nethra appointed UNADAP Goodwill Ambassador Madurai salon owner's daughter Nethra appointed UNADAP Goodwill Ambassador

மேலும் படிக்க : பாஜகவில் இணையவில்லை : மதுரை சலூன் கடைக்காரர் மறுப்பு!

இக்குடும்பத்தினரின் சேவையை பாராட்டியுள்ள ஐ.நா, நேத்ராவை வளர்ச்சி மற்றும் அமைதி அமைப்பின் ( United Nations Association for Development And Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக நேத்ரா  அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெனிவா மற்றும் நியூயார்க்கில் நடைபெற இருக்கும் ஐ.நா வறுமை ஒழிப்பு மாநாட்டில் இவர் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment