Madurai Sellur people celebrated 101st birthday for a banyan tree : 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் மனிதர்களுக்கு பிறந்த நாள் விழாக்கள் நடைபெறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசமாக மரத்திற்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர் நம்மக்கள். அதுவும் எங்கே தெரியுமா? நம்முடைய மதுரையில் தான்.
101 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் மீனாம்பாள்புர கண்மாய் கரையோரமாக ஒரு ஆலமரம் நடப்பட்டுள்ளது. அந்த மரத்திற்கு கடந்த ஆண்டே 100-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று 101வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அவ்வூர் பொதுமக்கள் பலர் ஒன்று கூடி ஆலமரத்திற்கு மின் விளக்குகளால் அலங்காரம் செய்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். எத்தனையோ இயற்கை பேரிடர்கள் வந்த போதும் ஆலமரம் கம்பீரமாய் வளர்ந்து கொண்டே செல்கிறது. இன்று செல்லூர் மீனாம்பாள்புரத்தின் அடையாளமாக நிலைத்து நிற்கிறது இந்த ஆலமரம். நாமும் இந்த ஆலமரத்திற்கு ஹேப்பி பர்த்டே சொல்லுவோம் ஃப்ரெண்ட்ஸ். மரங்களை நட்டு வைப்போம் அது நம் தலைமுறையை காக்கும் என்பது இது தான் போல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil