கிரில், தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு சிகிச்சை: மதுரையில் பரபரப்பு

சோழவந்தானில் உள்ள ஒரு உணவகத்தில் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 22 பேர் வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai Sholavandan 22 hospitalized eating Grilled and Tandoori Chicken Tamil News

சோழவந்தானில் உள்ள ஒரு உணவகத்தில் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 22 பேர் வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சோழவந்தான் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது

Advertisment

மதுரை அருகே சோழவந்தானில் உள்ள ஒரு உணவகத்தில் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 22 பேர் வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

கூடைப்பந்து விளையாட வந்த பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் இந்த உணவகத்தில் சிக்கன் வாங்கிச் சாப்பிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களும் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உணவகத்தில் இருந்து சிக்கன் மற்றும் உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், உணவின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டும் இத்தகைய உணவு விஷப்பதிப்புகள் இடம்பெற்றிருந்ததை நினைவுபடுத்தும் இந்த சம்பவம், உணவகங்களின் சுகாதார முறைகள் குறித்து கேள்வி எழுப்புகிறது. சோழவந்தான் காவல்துறையினர் இந்த சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: