/indian-express-tamil/media/media_files/2025/06/20/whatsapp-image-2025-2025-06-20-10-23-08.jpeg)
Madurai
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்கறி மார்க்கெட்டுகள் இயங்கி வரும் நிலையில், மாநகர பகுதியான கீழமாரட் வீதியில் வெங்காயம் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிக அளவில் குவிகின்றனர்.
இங்கு வெங்காய விற்பனை தொடர்பாக, வெங்காய வணிகர் சங்க தலைவர் முகமது இஸ்மாயில் கூறியதாவது: ‘தற்போது சின்ன வெங்காயம் (முதல் தரம்) மொத்த விலையில் 10 கிலோக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. சில்லரையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விலைபோகிறது. இடைத் தரம் சில்லரையில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
பெரிய வெங்காயம் (முதல் தரம்) மொத்தமாக 10 கிலோக்கு ரூ.280 முதல் ரூ.300 வரை விலை நிலவுகிறது. சில்லரையில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.22 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் பெரும்பாலும் மகாராஷ்டிரா, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சின்ன வெங்காயம் அதிகளவில் தேனி மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகிறது.
மேலும், தற்போது பெரிய வெங்காய விலையில் மாற்றம் வரக்கூடிய சாத்தியம் இல்லை, ஆனால் மழை அதிகரித்தால் சின்ன வெங்காயம் வரத்து குறையும் நிலையில், விலை உயர வாய்ப்பு இருப்பதாக இஸ்மாயில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.