தேவையான பொருட்கள்
புதிய சோறு - 20 பேர்
சீரக சம்பா - 2 பாடி
தேங்காய் எண்ணெய் - 400 மிலி
வெங்காயம் - 800 கிராம்
பச்சை மிளகாய் - 8 எண்கள்.
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலைகள் - 60 முதல் 70 கிராம்
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
இலவங்கப்பட்டை - 4 கிராம்
ஏலக்காய் - 4 கிராம்
கிராம்பு - 4 கிராம்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 50 முதல் 70 கிராம்
தயிர் - 200 மிலி
எலுமிச்சை - 2 எண்கள்.
உப்பு - சுவைக்க
நெய் - 400 கிராம்
இந்த அளவு 20 பேர் சாப்பிடுவதற்காக குறிக்கப்பட்டது. எனவே நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து பொறிக்கவும். அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் புதினா, கொத்தமல்லி தழைகளை சேர்த்து ஒரு கிளறு கிளறி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும். பின்னர் இதில் தயிர் சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
மசாலாக்கள் அனைத்தும் நன்கு வெந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். நீர் கொதித்து வந்ததும் அதில் ஊற வைத்து எடுத்துள்ள அரிசியை போடவும். அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் எலுமிச்சம்பழ சாறு சேர்த்து கிளறிவிட்டு நெய் சேர்த்து வேக விட வேண்டும். அதில் சிறிது கொதி வந்ததும் முந்திரிப் பருப்பு மேலே சேர்த்து கிளறவும். வெந்தவுடன் சிறிது மல்லி இலை, ஏலக்காய் பொடி தூவி தம் போடலாம். தம் போட்டு இறக்கினால் சூடான நெய் சாதம் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“