7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மதுரை எஸ்.பி அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டு சிறை

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலாஜி (44) போக்சோ வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலாஜி (44) போக்சோ வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Madurai superintendent of Police office employee gets 30 years prison for sexually assaulting 7 year old girl Tamil News

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலாஜி (44) போக்சோ வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

Advertisment

காரைக்குடியைச் சேர்ந்த பாலாஜி விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊருக்கு வரும்போது, 7 வயது சிறுமி ஒருவரை போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், பாலாஜிக்கு சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.2,000 அபராதமும் விதித்தார். மேலும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.25,000 அபராதமும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

மேலும், அபராதத் தொகையில் ரூ.46,000 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதனுடன் சேர்த்து அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Madurai Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: