மதுரை த.வெ.க மாநாடு: 'பைக்கில் வருவதை தவிர்க்கவும்' - போலீஸ் அறிவுறுத்தல்

மதுரை த.வெ.க மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை பயன்படுத்துமாறும் மதுரை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை த.வெ.க மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை பயன்படுத்துமாறும் மதுரை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai Tamilaga Vettri Kazhagam conference Parappatty Police instruct to avoid coming  on two wheelers use permitted routes Tamil News

மதுரை த.வெ.க மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை பயன்படுத்துமாறும் மதுரை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை த.வெ.க மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை பயன்படுத்துமாறும் மதுரை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Advertisment

மதுரை - தூத்துக்குடி சாலையில் பாரபத்தியில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க கட்சியின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாநாடு நாளன்று இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தனித்தனி வழித்தடங்கள் மற்றும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும். அதேபோல் கோவை, சேலம், திருப்பூர், தேனி, கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்ட வாகனங்களுக்கு தனிப்பட்ட வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை, திருச்சி உள்ளிட்ட வடமாவட்டங்கள் வழியாக வரும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அருப்புக்கோட்டை சந்திப்பில் இருந்து பாரபத்தி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisment
Advertisements

மாநாட்டிற்கு வருவோர் அனைவரும் காவல்துறை வழங்கியுள்ள வழித்தட, பார்க்கிங் மற்றும் போக்குவரத்து அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்வதில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Vijay Madurai Tamilaga Vettri Kazhagam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: