/indian-express-tamil/media/media_files/2025/08/20/madurai-tamilaga-vettri-kazhagam-conference-parappatty-vijay-mgr-anna-flex-board-tamil-news-2025-08-20-11-41-40.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் தற்போது நிறைவு அடைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 2-வது மாநில மாநாடு நாளை (வியாழக்கிழமை) மதுரை மாவட்டம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற மாநாட்டைத் தொடர்ந்து, இம்முறை நடைபெறும் மாநாடு கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாநாட்டைத் தலைவர் விஜய் நேரடியாக முன்னிலையாகி நடத்தவுள்ளார்.
இதற்காக சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக மாநாட்டு தயாரிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் தற்போது நிறைவு அடைந்துள்ளது.
மாநாட்டு மேடையின் உச்சியில் முன்னாள் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருடன், தவெக தலைவர் விஜய் இடம்பெற்றிருக்கும் பெரிய அளவிலான படங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது, மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு விசேஷ ஈர்ப்பாக அமையும் வகையில் அமைந்துள்ளது. மாநாட்டில் கட்சியின் வளர்ச்சி, அடுத்தடுத்த தேர்தல் திட்டங்கள், பொதுமக்கள் தொடர்பான தீர்மானங்கள் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.