மதுரை மாட்டுத்தாவணியில் 5.63 ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2022 ஆண்டு செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி டைடல் பார்க் அமைக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கட்டுமானத்திற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டு உள்ளது.
இது குறித்து டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 5.63 ஏக்கர் இடத்தில் ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் 12 தளங்களைக் கொண்ட டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கான இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
http://tntenders.gov.in என்று இணையதளம் மூலமாக செப்டம்பர் 7-ம் தேதி மதியம் மூன்று மணிக்குள் டெண்டருக்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 5.63 ஏக்கரில் 45 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டு டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“