சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பா.ஜ.க. மகளிரணி சார்பில் போராட்டம் நடந்தது. செல்லத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை செல்லும் பேரணியாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை.
இந்நிலையில் பா.ஜ.க. மகளிர் அணியினரும், மாநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரும் செல்லத்தம்மன் கோவில் அருகே திரண்ட னர். போலீசார் அனுமதி கொடுக்காததால் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநில மகளிர் அணி தலைவி உமாரவி தலைமை தாங்கினார்.
ஈரோடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க தேசிய உறுப்பினர் நடிகை குஷ்பூ இப்பேரணியில் பங்கேற்றார். இந்த போராட்டத்தின் போது, கண்ணகி கோவிலான மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவிலில் உள்ள கண்ணகி சிலைக்கு மிளகாய் வற்றலை உரலில் இடித்து பூசினர்.
குஷ்பூ பேச்சு
இந்த போராட்டத்தின் போது குஷ்பூ பேசுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்டதிற்காக வீதிக்கு வந்து போராடும் கூட்டம் இது. ஒவ்வொரு ஆண் இருக்கும் வீட்டிலும் ஒரு பெண் இருக்கிறார். சகோதரியாக, மனைவியாக, மகளாக உள்ளனர். தி.மு.க நிர்வாகிகள் ஒவ்வொருவரும் நம்மை பார்த்து 'பப்ளிசிட்டி தேடுகிறார்கள்' என கூறுகிறார்கள்.
பா.ஜ.க. பப்ளிசிட்டியை விரும்புவதில்லை. பப்ளிசிட்டியும், விளம்பரமும் தேவைப்படுவது தி.மு.க.வினருக்குத் தான். கட்சிக்கு அப்பாற்பட்டு ஒரு முதல்வர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு ஒரு சகோதரராக, ஒரு தந்தையாக முன்னிற்க வேண்டும். இன்றைக்கு ஒரு பெண்ணுக்கு பாதிப்பு வந்தால் நாளைக்கு என்னுடைய வீட்டிலும், உங்களது வீட்டிலும் பெண் குழந்தைக்கு பிரச்சனை வரும்.
எங்களுக்கு தேவை நீதி! பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை? பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வீட் டிற்கு வரும்போது பத்திரமாக வருகிறார்களா?. பள்ளி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
செல்போன் மூலம் ரேஸ் செய்து கண்டுபிடிக்க கூடிய காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவி விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இவ்வளவு நாளா?. இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.போலீஸ் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறது?. என்று கேள்வி எழுப்பினார்.
ரஷ்ய பெண் பேச்சு
பா.ஜ.க-வின் இந்தப் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த பெண் கத்திரினா கலந்து கொண்டார். அவர் பா.ஜ.க மகளிர் அணியுடன் சேர்ந்து உரலில் மி காய் அரைத்தார். இதுபற்றி அவர் பேசுகையில், உலகெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுத்தாகவும், அதனால், இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அரசியல் கட்சிகள் யார் வேண்டும் என்றாலும், அநீதிக்கு எதிராக மக்கள் இயக்கமாக போராட்டம் நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்டு மந்தையுடன் பா.ஜ.க-வினர் அடைப்பு
இதனிடையே, நடிகை குஷ்பு உள்பட 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. மகளிரணியினர் தடையை மீறி போராட்டம் நடத்தியதாலும், பேரணியாக செல்ல முயன்றதாலும் போலீசார் வழிமறித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அது மதுரை ஆடு வியாபாரிகள் திருமண மண்டபம் ஆகும்.
நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க-வினர் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அதே நேரத்தில், ஆடுகளும் அடைக்கப்பட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் அந்த மண்டபத்தினுள் அடைக்கப்பட்டது. ஆடுகள் அருகே மகளிரணியினர் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர். அந்த மண்டபத்தில் ஏற்கனவே ஆடுகள் அடைக்கப்பட்டு இருந்த சூழலில், பா.ஜ.க-வினரின் கைதுக்குப் பின் கூடுதலாக ஆடுகள் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
#VIDEO || மதுரை ஆடு வியாபாரிகள் திருமண மண்டபத்தில், போராட்டத்தில் கைதான குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.க-வினர் அடைப்பு! #Kushboo | #TNBJP | #AnnaUniversityCase | #Madurai pic.twitter.com/YSXx6ArXB2
— Indian Express Tamil (@IeTamil) January 3, 2025
'ஆட்டுக் குட்டிகளுடன் அடைத்தனர்' - குஷ்பூ பேட்டி
இந்த நிலையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்று கைதான குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்போது காரில் இருந்தபடி குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், " ஆட்டுக் குட்டிகள் இருந்த இடத்தில் தான் அடைத்து வைத்தார்கள்... அங்கு நிறைய ஆடுகள் இருந்தன.. " என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.