மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும், கொழும்பு, துபாய் ஆகிய நகரங்களுக்கு சர்வதேச விமான சேவையும் இயக்கப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக மதுரை - சென்னை வழித்தடத்தில் நாள்தோறும் 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மே மாதம் 1ஆம் தேதி முதல் மதுரை - சென்னை இடையே கூடுதலாக ஒரு விமானத்தை இயக்கவுள்ளது.
இதன் மூலம் இந்த வழித்தடத்தில் நாள்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும். கூடுதல் விமானமானது சென்னையில் இருந்து மாலை 6:25 மணிக்கு புறப்பட்டு இரவு 7:45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேரும்.
அதேபோல், மதுரையில் இருந்து இரவு 8:10 மணிக்கு புறப்பட்டு 9:30 மணிக்கு சென்னை சென்றடையும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.