மதுரை, சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையம் மற்றும் மாகாளிபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (டிச 11) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. மின் தடை ஏற்படவுள்ள இடங்களின் பட்டியலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவ ர்சந்து, வைக்கோல்கார தெரு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படவுள்ளது.
இதேபோல், பாப்பன் கிணற்று சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பேருந்து நிலையம்,TPK ரோடு திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒரு பகுதி, தெற்கு காவணி மூல வீதி ஒரு பகுதி, தெற்குமாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதிம், பாண்டி வேளாளர் தெரு,
வீரராகவ பெருமாள்கோவில், எழுத்தாணிகாரத் தெரு, பச்சரிசிகாரத் தெரு ஒரு பகுதி, கிரைம் பிரான்ச், காஜிமார தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியா தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
புது மாகாளிபட்டி ரோடு வடக்குப்பகுதி, கிருதுமால் நதிரோடு, திரௌபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்குப்பகுதி மற்றும் மேற்குபகுதி, செட்டியூ ரணி FF ரோடு, பாம்பன் ரோடு,சண்முகமணி நாடார் சந்து போன்ற இடங்களில் மின் தடை நாளை ஏற்படவுள்ளது.
நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, மிஷன் மருத்துவமனை பாம்பன் ரோடு, வீழபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, NMR ரோடு, சிந்தாமணி ரோடு CSI பல் மருத்துகல்லூரி பகுதிகள் மற்றும் நாகுபிள்ளை தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை செய்யப்படவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“