/indian-express-tamil/media/media_files/2025/06/07/togs8A1QIDDkn7EkGxmY.jpg)
4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் ஜுன் 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது
-
Jun 07, 2025 20:40 IST
பாலினம் கண்டறிய ஸ்கேன் செய்த இருவர் கைது
சேலம் அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய ஸ்கேன் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
Jun 07, 2025 20:17 IST
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 07, 2025 19:18 IST
அமித்ஷா வருகை எதிரொலி - மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு சோதனை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஜூன் 8) சாமி தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (ஜூன் 7) சோதனை மேற்கொள்ளப்பட்டது.
-
Jun 07, 2025 17:34 IST
ஆடு தருவதாக கூறி இஸ்லாமியர்களிடம் பணமோசடி
வாடிப்பட்டியை சேர்ந்த ஆட்டு பண்ணையாளர், பல இஸ்லாமியர்களிடம் ரூ.8 ஆயிரம் கட்டினால், ஓராண்டு கழித்து ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள ஆடு வழங்குவதாக கூறி மோசடி செய்துள்ளார். கடந்த ஆண்டு பணம் பெற்ற நிலையில், இந்தாண்டு ஆடுகள் வழங்காமல் பண மோசடி
செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. -
Jun 07, 2025 16:51 IST
அய்யனார் ஊத்து துணை மின் நிலையத்தில் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து துணை மின் நிலையத்தில் தீ விபத்து. 6 மணிநேரமாக தீயை அணைக்கும் பணிகள் தீவிரம் ஒரு டிரான்ஸ்ஃபார்மரில் பற்றிய தீ, மற்ற டிரான்ஸ்ஃபார்மருக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. 5 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
-
Jun 07, 2025 16:34 IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 07, 2025 15:49 IST
சுங்கச்சாவடி கட்டணம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்திருந்த நிலையில் மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணைக்கு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 07, 2025 15:49 IST
சூலூர் அருகே வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை - போலீசார் விசாரணை
சூலூர் அருகே, அரசூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டில் வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jun 07, 2025 15:05 IST
நகைக்கடையில் பகலில் திருட்டு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே உள்ள நகை கடையில், தங்க நகை வாங்குவது போல் நடித்து அதை திருடிய பெண்ணொருவர், கவரிங் நகையை மாற்றிவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியானது.
-
Jun 07, 2025 13:57 IST
10 ரூபாய் மருத்துவர் ரத்தினம்பிள்ளை (96) மறைவு
பட்டுக்கோட்டை: சீனிவாசபுரம் பகுதியில் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை (96) வயது மூப்பு காரணமாக காலமானார். 65 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தார்
-
Jun 07, 2025 13:13 IST
நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை
நெல்லை: நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 07, 2025 12:50 IST
கழுத்தறுத்த மகன்: சிகிச்சை பலனின்றி தந்தை பலி
மறு திருமணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருந்த 69 வயது தந்தை செல்வகுமாரை காய்கறிகள் நறுக்க பயன்படும் கத்தியை கொண்டு கழுத்தை அறுத்த மகன் தமிழழகன்
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தந்தை மரணம் - மகன் கைது
-
Jun 07, 2025 12:21 IST
ரூ.3 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்
கோவை வந்த சிங்கப்பூர் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பெண்ணின் உடைமைகளை சோதித்தபோது கஞ்சா கண்டுபிடிப்பு
-
Jun 07, 2025 12:17 IST
கழுத்தளவு தண்ணீரில் வாழைத் தார்களை சுமந்து செல்லும் தொழிலாளர்கள்
#Watch | தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ஏரல் பகுதிகளில், தங்களது வாழ்வாதாரத்திற்காக கழுத்தளவு தண்ணீரிலும் வாழைத் தார்களை தலையில் சுமந்து செல்லும் தொழிலாளர்கள்..!
— Sun News (@sunnewstamil) June 7, 2025
தங்கள் பிள்ளைகள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்திட அரசுக்கு கோரிக்கை!#SunNews | #Tuticorin | #Vaazhai | #Labours pic.twitter.com/fVlIUGpBrnCredit: Sun News
-
Jun 07, 2025 11:48 IST
மனித நேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை மறைவு
#NewsUpdate | மறைந்தார் மனித நேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை.#SunNews | #Pattukkottai pic.twitter.com/eoeI5I455s
— Sun News (@sunnewstamil) June 7, 2025Credit: Sun News
-
Jun 07, 2025 11:11 IST
5 அடுக்கு பாதுகாப்பு
அமித் ஷா வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Jun 07, 2025 10:23 IST
திருவள்ளூர்: மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை பலி
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி வீட்டின் அருகே தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிய அவருடைய மகனை பக்கத்து வீட்டு இளைஞர்கள் கயிறு மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jun 07, 2025 09:46 IST
மருதமலை: 9-ந் தேதி பக்தர்கள் வாகனங்களில் செல்ல தடை
வைகாசி விசாகத்தை ஒட்டி பாதுகாப்பு மற்றும் நெரிசலை தவிர்க்க 9-ந் தேதி மருதமலை மலைப்பாதையில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் மலைப் படிகள் வழியாகவும் கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேருந்துகளில் சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Jun 07, 2025 09:17 IST
கல்பாக்கம் அருகே லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி 2 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் துரை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கண்ணன் என்பவர் உயிரிழந்தார்.
-
Jun 07, 2025 09:17 IST
மதுரையில் இன்று அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
-
Jun 07, 2025 09:16 IST
நாமக்கல்: பழைய இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து
நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தில் முத்துகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமாக பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 07, 2025 09:15 IST
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
பக்ரீத் பண்டிகை என்பதால் குமரி தோவாளை மார்க்கெட்டில் பிச்சிப்பூ விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.600 உயர்ந்து ரூ.1,200-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.550-ல் இருந்து ரூ.550 உயர்ந்து ரூ.1100-க்கும் விற்பனையானது.
-
Jun 07, 2025 09:09 IST
இன்று மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் மதுரை வருகிறார். அதன்பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேச உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.