நில விற்பனை விவகாரம்: தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி பலி

மதுரை ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னர் ஊற்றி தீக்குளித்த நபர் 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னர் ஊற்றி தீக்குளித்த நபர் 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
madurai umachikulam land issues man Died by fire Tamil News

14 சென்ட் நிலத்தை கனகவேல் மற்றொருவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் முந்தைய உரிமையாளர் மாதவன் தின்னர் ஊற்றி தீக்குளித்தார்.

Tamil-nadu: மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் அருகே எருக்கலை நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (50). இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனகவேல் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். பொருளாதார ரீதியான பிரச்சனையால் நிலத்தை மீட்க முடியாத நிலையில் அதனை கனகவேலிடமே சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்துள்ளார்.

Advertisment

இதையடுத்து, மாதவனின் இடத்தினை கனகவலே் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யவுள்ளதை அறிந்து இடத்தினை மீண்டும் கனகவேலிடம் கேட்டுள்ளார். .கனகவேல் தர மறுத்து நேற்று வேறொரு நபருக்கு விற்க ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம் வந்தார்.

இந்நிலையில் அங்கு சென்ற மாதவன் திடிரென பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் காயமடைந்த மாதவனை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 95 சதவித தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ஊமச்சிகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: