scorecardresearch

மாணவிகள் பாலியல் புகார்; மதுரை பேராசிரியர் கைது

கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

Maharashtra Cops Bust Sex Racket
நடிகை வறுமை காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் கருப்பையா. இவர் மீது மதுரை சமயநல்லூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில், கல்லூரி மாணவிகள் சிலர் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் கருப்பையாவை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உளவியல் பேராசிரியராக பணிபுரிந்துவரும் கருப்பையா மாணவிகளிடத்தில் தவறாக நடந்துள்ளார் என்றும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்லூரி மாணவிகள் மதுரை சரக டிஐஜி பொன்னியை சந்தித்து முறையிட்டுள்ளனர். இதையடுத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madurai university professor arrested on sex complaint