தாமதமாக வந்த மதுரை கலெக்டர்: 9 மணி நேரம் காத்திருந்த கடுப்பில் வெளியேறிய பொதுமக்கள்; வாடிப்பட்டியில் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள், 9 மணி நேரம் காத்திருந்த நிலையில், மாலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வந்ததால் கடுப்புடன் வெளியேறினர்.

author-image
WebDesk
New Update
Madurai vadipatti taluk office people walkout as collector sangeetha came 9 hours late Tamil News

மதுரை வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள், 9 மணி நேரம் காத்திருந்த நிலையில், மாலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வந்ததால் கடுப்புடன் வெளியேறினர்.

மதுரை வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள், 9 மணி நேரம் காத்திருந்த நிலையில், மாலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வந்ததால் கடுப்புடன் வெளியேறினர்.

Advertisment

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று (மார்ச் 26) பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறுவதாக அறிவித்திருந்தார். இதற்காக காலை 9 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர், வாடிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என மண்டியிட்டு காத்திருந்தனர்.

ஆனால், மதுரை சங்கீதா ஆட்சியர் நண்பகல் வரை வராததால், "இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்" என்று அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தனர். மக்கள் வரிசையை விட்டுவிடக்கூடாது என்பதால், வெயிலில், பசியோடும், தாகத்தோடும் அசையாமல் நின்றனர்.

மாலை 4 மணி கடந்ததும், அதிகாரிகள் மனுக்களை பெற தொடங்கினர். ஆட்சியர் சங்கீதா இரவு 7 மணிக்கு வந்ததும், 143 மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், ஒரு பெண் மனுவை கொடுத்தபோது, "ஆய்வு செய்யலாம்" என பதில் கிடைத்ததால், "இதற்காகவா காலை முதல் காத்திருந்தோம்?" என்று புலம்பிக்கொண்டு வெளியேறினார்.அவரை ஆட்சியர் அழைக்கச் சொல்லியும், அவர் கோபத்தில் மறுத்து சென்றார். 

Advertisment
Advertisements

மனுக்களை கொடுத்த பிறகு, மக்கள் 9 மணி நேரம் வெயிலில் காத்திருந்த அதிருப்தியுடன் ஊர் திரும்பினர். முதியவர்கள், பெண்கள் என அனைவரும் பசியோடும், கடுப்போடும் கிளம்பிச் சென்றதால், இந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: