Advertisment

'இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை': 200 மாணவர்கள் பங்கேற்பு; மதுரையில் டிச.15-ல் தொடக்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 21-ஆம் தேதி வரை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
World Tamil Association

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, மதுரை தமிழ்ச் சங்கத்தில் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.

Advertisment

தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் 200 பேருக்கு, ஆண்டுதோறும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பட்டறை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இப்பயிற்சியில் கல்லூரி மாணவர்களிடையே முதல் நாளில் “இயல் இசை அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் முனைவர் ஞா.கற்பகம், “எண்ணிய எண்ணியாங்கு எய்துப” என்ற தலைப்பில் த.ஸ்டாலின் குணசேகரன், “தொல்காப்பியம் கூறும் புறத்திணை வாழ்வியல்” என்ற தலைப்பில் முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு,  “சங்கத்தமிழ் சுட்டும் விழுமியங்கள்” என்ற தலைப்பில் பேராசிரியர் சி.ஆர்.மஞ்சுளா, “நெய்தல் காட்டும் வாழ்வியல்” என்ற தலைப்பில் குறும்பனை சி.பெர்லின், “சங்க கால வரலாற்றில் சூது பவள மணிகள்” என்ற தலைப்பில் முனைவர் ஜ.வள்ளி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இரண்டாம் நாளில் “தமிழ் மென்பொருள் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் முனைவர் துரை மணிகண்டன், “அற்றம் காக்கும் கருவி” என்ற தலைப்பில் ச.கார்த்திகை செல்வன், “தமிழ் சட்டமும் பேசும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் பால சீனிவாசன், “குன்றென நிமிர்” என்ற தலைப்பில் நித்யா செல்வகுமார், “நடிகர் திலகமும் செந்தமிழும்” என்ற தலைப்பில் ஆலங்குடி வெள்ளைச்சாமி, “நோக்கரிய நோக்கே” என்ற தலைப்பில் இயக்குநர் ஜெ.எஸ்.சந்தானம் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

Advertisment
Advertisement

மூன்றாம் நாளில் “மொழிபெயர்ப்பு தேவைகள்” என்ற தலைப்பில் நா.முருகேச பாண்டியன், “நூலினைப் பகுத்துணர்” என்ற தலைப்பில் ஜோ.அருள் பிரகாஷ்,  ”மக்கள் திலகத்தின் மாண்புகள்” என்ற தலைப்பில் கலைமாமணி மணவை பொன்மாணிக்கம், “21 ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம்” என்ற தலைப்பில் இலால்குடி பா.எழில்செல்வன், “தொல் தமிழரின் அற வாழ்வியல்” என்ற தலைப்பில் “சித்ரா கணபதி”, “மானுடம் போற்றுதும்” என்ற தலைப்பில் சீ.ரேவதி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

நான்காம் நாளில் “தமிழ்த்தொண்டன் பாரதி” என்ற தலைப்பில் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம், “கம்பன் எனக்கு காதலன்” என்ற தலைப்பில் ஆசிரியர் கோ.மணி, “நா மணக்கும் நாலாயிரம்” என்ற தலைப்பில் பல்கலைவித்தகி ரேகா மணி, “தமிழோடு உரையாடுவோம்” என்ற தலைப்பில் இலக்கியச் சிம்மம் கங்கை மணிமாறன், “இன்பத்துள் இன்பம் தமிழ்” என்ற தலைப்பில் சிந்தனைச் செல்வி அனுக்கிரகா ஆதிபகவன், “பாட்டினில் அன்பு செய்” என்ற தலைப்பில் கவிஞர் கு.இரா.தரண் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

ஐந்தாம் நாளில் “பூமி இழந்திடேல்” என்ற தலைப்பில் ஹேமா ராகேஷ், “சங்க இலக்கியத்தில் கவித்துவம்” என்ற தலைப்பில் பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன், “நடுகல் மரபு தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வே.பார்த்திபன், “தெய்வம் நீ என்று உணர்!” என்ற தலைப்பில் பேராசிரியர் இராம மாணிக்கவாசகன், “இலக்கியத்தில் அறிவியல்” என்ற தலைப்பில் லெனின் காந்தி,  தந்தனத்தோம் வில்லுப்பாட்டு” என்ற தலைப்பில் கலைமாமணி திருமதி பாரதி திருமகன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

ஆறாம் நாளில் “தமிழர் சூழலியல் என்ற தலைப்பில் பாமயன், “வள்ளலாரும் தமிழும்” என்ற தலைப்பில் அட்சயா பாலசுப்ரமணியன், “சிறுகதையும் திரைக்கதையும்” என்ற தலைப்பில் இயக்குநர் ராசி அழகப்பன், “முத்தமிழும் முத்தமிழறிஞரும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, “கவிதை எமக்குத் தொழில்” என்ற தலைப்பில் கவிதா ஜவகர், “தமிழ் பதிப்பியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் இரங்கராஜன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

ஏழாம் நாளில் “நாடகம் எனும் கலை வடிவம்” என்ற தலைப்பில் நடிகர் கணேஷ் பாபு, “அயலகத் தமிழ்” எனும் தலைப்பில் சிங்கப்பூர் கல்வி அமைச்சு ஆசிரியர் மா.அர்ச்சுனன், “பேச்சுக்கலை” எனும் தலைப்பில் கவிஞர் இராஜகம்பீரன் அப்பாஸ், “மொழி காப்போம் இனம் காப்போம்” என்ற தலைப்பில் கவிஞர் பே.ராஜேந்திரன், “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்” என்ற தலைப்பில் இளைய சிலம்பொலி அருணை மா மதன்குமார், “இணையத் தமிழ் பயன்பாடுகள், சிந்தனைகள்” எனும் தலைப்பில் பேராசிரியர் தேனி மு. சுப்ரமணி ஆகியோர் மாணவர்களிடம் உரையாற்றுகின்றனர்.

இப்பயிற்சிப் பட்டறையில் பங்கு பெறும் மாணவர்களிடையே தமிழ் இலக்கிய வினாடி வினா நடத்தி பரிசுகள் வழங்குவதோடு, அவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றக் கலைக் குழுவினரின் நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment