/tamil-ie/media/media_files/uploads/2019/08/ml.jpg)
Maduravoyal-Chennai Port Corridor, Chennai elevated corridor, Chennai infrastructure projects, மதுரவாயல், சென்னை துறைமுகம், பறக்கும் சாலை, கோயம்பேடு
மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையேயான 20 கி.மீ நீள பறக்கும் சாலை திட்டத்திற்கு இருந்த தடை நீங்கியுள்ளதால், அதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த சாலையின் மூலம் அண்ணா சாலை, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூவம் ஆற்றின் தூண்கள் அமைக்கப்படுவதாக கூறி, 2012ம் ஆண்டில் பெரும்போராட்டம் வெடித்தநிலையில், பணிகள் முடங்கின. 18.3 கி.மீ. தொலைவு கொண்டதாக இருந்த இந்த திட்டம் இந்த போராட்டத்தையடுத்து 20.3 கி.மீ ஆக அதிகரித்தது.
இந்த பறக்கும் சாலையில் கண்டெய்னர் லாரிகள் மட்டும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற வாகனங்கள் செல்வதற்கு அதற்குரிய சுங்க கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் சாலை 8 வழிகளை கொண்டதாக அமைக்கப்படுகிறது. சிவானந்தா மற்றும் காலேஜ் ரோடு வழியாக நுழையும் வாகனங்கள், காமராஜர் சாலத, ஸ்பர் டேங்க் சாலை வழியாக வெளியேறும். கோயம்பேடு, நெற்குன்றம், வானகரம் மற்றும் சென்னை துறைமுகத்தின் வழியாக வரும் வாகனங்களுக்காக அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதியில் நுழைய மற்றும் வெளியேற வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.