/tamil-ie/media/media_files/uploads/2022/04/Ilaiyaraaja-2.jpeg)
Maestro Ilaiyaraaja nominated to Rajya Sabha
இசைஞானி இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
216 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள். அப்படி நியமிக்கப்படுபவர்கள் பொதுவாக சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களாக இருக்க வேண்டும்.
அதன்படி மாநிலங்களவையில் தற்போது நியமன உறுப்பினர்களாக ரஞ்சன் கோகாய், மகேஷ் ஜேட்மலானி, சோனல் மான்சிங், ராம் ஷகால், ராகேஷ் சின்ஹா ஆகிய ஐந்து பேர் உள்ளனர்.
தற்போது, இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியரும், பிரபல இயக்குனர் ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெகடே, ஆகியோர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளையராஜாவுக்கு இந்திய அரசு ஏற்கெனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்து இருக்கிறது. அந்தவகையில் இப்போது அவரை ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவித்து மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, புதிய நியமன உறுப்பினராகவிருக்கும் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "தலைமுறைகளை கடந்து மக்களை தன்பால் ஈர்த்த படைப்புலக மேதை இளைராஜா. அவரது இசை பல்வேறு உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கக்கூடியது. எளிய பின்னணியில் இருந்து இந்த அளவுக்கு சாதனைகளை படைத்தவரின் வாழ்க்கை பயணம் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது," என தெரிவித்துள்ளார்.
தலைமுறைகளைக் கடந்து @ilaiyaraaja அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. pic.twitter.com/qgV1ZlK9lP
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
ரஜினிகாந்த் வாழ்த்து
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja
— Rajinikanth (@rajinikanth) July 6, 2022
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
இசை மாமேதை உத்வேகம் தரும் தனது வாழ்க்கை பயணத்தில் இசைஞானி இளையராஜா @ilaiyaraaja பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி ,அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். pic.twitter.com/fSnNDf6bzZ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 6, 2022
கமல்ஹாசன் வாழ்த்து
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2022
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' @ilaiyaraaja அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! pic.twitter.com/zCqWAzA7RJ
— M.K.Stalin (@mkstalin) July 6, 2022
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள #இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 6, 2022
இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர்.
பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.@ilaiyaraajapic.twitter.com/ao02s0MSmq
இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து
மாநிலங்களவை
— Bharathiraja (@offBharathiraja) July 6, 2022
நியமன உறுப்பினராக
நியமக்கிப்படள்ள
என் உயிர் தோழனுக்கு
வாழ்த்துக்கள். pic.twitter.com/9FLLycJ0Sm
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து
பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை!#என்றும்_ராஜா_இளையராஜா
— K.Annamalai (@annamalai_k) July 6, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.