/indian-express-tamil/media/media_files/peHGJ4S2mpXufbCFx0S7.jpg)
மாஃபா பாண்டியராஜன்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் பரவியதையடுத்து, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, “என்றும் அம்மா வழியில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் உண்மையுடன்” என்று கூறினார்.
கடந்த மாதம் சில அ.தி.மு.க மற்றும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டனர். அதே போல, கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, விஜய தரணியும் பா.ஜ.க-வில் இணைந்தார்.
அந்த வரிசையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அ.தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் பரவிவருகிறது. இந்த தகவலை மறுக்கும் விதமாக, மாஃபா பாண்டியராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன், உண்மையுடன்” என்று 3 ஆண்டுகளுக்கு முன் இட்ட பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நிறுவனங்களின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் பாரதம் முழுவதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் புனிதப் பணியில் முதன்மை இயக்குனராக பங்களிக்க உள்ளேன், என் இறுதி மூச்சு உள்ளவரை அ.இ.அ.தி.மு.க மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன் என்பதை தெளிவு படுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் ! https://t.co/JO12cZ80qN
— Pandiarajan K (@mafoikprajan) February 25, 2024
இந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து, “என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் உண்மையுடன்” என்று பதிவிட்டு, அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக பரவும் செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று மாஃபா பாண்டியராஜன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மாஃபா பாண்டியராஜன் 3 ஆண்டுகளுக்கு முன் “என் இறுதி மூச்சு உள்ளவரை அ.தி.மு.க மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்” என எக்ஸ் தளத்தில் இட்டப் பதிவை பகிர்ந்து “என்றும் புரட்சித் தலைவி அம்மா தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன், உண்மையுடன்” என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.