Advertisment

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: சென்னை ஆணையர் முக்கிய தகவல்

சென்னையில் முதல் கட்டமாக 600 ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
magalir urimai thogai, Greater Chennai Corporation Commissioner J. Radhakrishnan IAS Tamil News

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னையில் வீடுவீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை முழுமையாக பயன்படுத்த உள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து இவர்கள் வீடு வீடாக விண்ணப்பம் வழங்குவார்கள்.

பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 1,417 ரேஷன் கடைகள் உள்ளது. இதனால் மொத்தம் 3,550 மையங்கள் அமைக்க முடிவு செய்து உள்ளோம்.

வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும். கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும். இந்த மையங்களுக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

சென்னையில் 1,417 ரேஷன் கடைகளில் 17.81 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 600 ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகம். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குடும்ப தலைவிகளுக்கு உதவ ஒரு அலுவலர் இருப்பார்.

தகுதி உடைய பெண்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை வரும் 17ஆம் தேதி முதல் செயல்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Greater Chennai Corporation Dr Radhakrishnan Tn Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment