மகளிர் உரிமை திட்டம் குறித்து போலி தொலைப்பேசி அழைப்புகள், எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் ஆப் செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத் தொகை திட்டதின் கீழ் ரூ.1000-ஐ பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக ரூ.1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில், சென்னை , சேலம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரு.1000 செலுத்தும் பணி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமை திட்டம் குறித்து போலி தொலைப்பேசி அழைப்புகள், எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் ஆப் செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில பெண்களுக்கு போலி எஸ்.எம்.எஸ் செய்தி வந்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு ஓ.டி.பி எண்களை கேட்டு தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருந்தால், அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“