/indian-express-tamil/media/media_files/52NoRwXy4eMr42gNWjaR.jpg)
தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tamil-nadu | cm-mk-stalin: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவை மையங்கள் மூலம் 18ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும். நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும்." என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் பேச்சு
"மகளிர் உரிமைத்தொகை திட்டம் வட்ட அளவில் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தகுதி இருப்பவர்கள் உதவி மையத்தை அணுகலாம். ஏழைகள் தவிர்க்கப்படவில்லை. விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது" என்று நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.