மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக இன்று முதல் உதவி மையம் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கான இந்த திட்டம் எப்போது அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 15ம் தேதி செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் எல்லா பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இதற்காக சில விதிகள் வகுக்கப்பட்டன. உரிமைத் தொகைக்கு விண்ணபிக்கும் பெண்கள் வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது, அதுபோல் ஆண்டுக்கு 360 யூனிட்கள் மின்கட்டணம் செலுத்தக் கூடாது. கார், வேன், லாரி வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது.
குறிப்பாக அரசு ஊழியர்களாக இருக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்காக வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். அவர்களில் 1.06 கோடி பேரே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி அவருடைய பிறந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஏ.டி.ஏம் கார்டு வழங்கப்பட்டது. முதல்வருடன் அந்தந்த வங்கிகளின் உயரதிகாரிகளும் இருந்தனர். இந்த தொகை இனி மாதமாதம் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் நேற்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று முதல் உதவி மையம் செயல்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட பயனாளிகள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு நிராகரித்ததற்கான காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது எனவும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு, விண்ணப்பம் ஏற்கப்படும் ரூ.1000 உதவிக் தொகை கிடைக்காதவர்களும் இந்த உதவி மையத்தை நாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“